எம்.எம்.சில்வஸெ்டர்
இலங்கை கிரிக்கெட் ஜாம்பவானான சனத் ஜயசூரிய அவுஸ்திரேலியாவிலுள்ள முல்கிரேவ் கிரிக்கெட் கழகத்துக்கு பிரதான பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி 2021-2022 பருவகாலத்துக்கு முல்கிரேவ் கழகத்தின் பிரதான பயிற்றுநராக சனத் ஜயசூரிய செயற்படவுள்ளார்.அவுஸ்திரேலியாவின் முல்கிரேவ் கழகத்துக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் இருவர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி முல்கிரேவ் கழக அணியின் தலைவராக திலகரட்ண டில்ஷான் செயற்படுவதுடன், மற்றுமொரு சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகத் திகழ்ந்த உப்புல் தரங்கவும் அவ்வணியில் இணைந்து விளையாடி வருகின்றார்.
சனத் ஜயசூரிய இலங்கை அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகள், 445 சர்வதேச ஒருநாள் போட்டிகள், 31 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த மூன்று வகையான போட்டிகளிலும் மொத்தமாக 42 சதங்கள், 103 அரைச்சதங்கள் அடங்களாக 21032 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், 440 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM