bestweb

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் அர்ப்பணிப்புடனும் பணியாற்ற வேண்டும்: சுற்றுச்சூழல் நிலை குறித்து சஜித் கவலை..!

Published By: Digital Desk 8

05 Jun, 2021 | 10:16 AM
image

இவ்வாண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர், விஷேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார். 

இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள்,"சுற்றுச்சூழல் அமைப்பை மறுசீரமைப்போம்"என்பதாகும். ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு 2021-2030 தசாப்தத்துடன் ஒத்துப்போகிறது என்பது இம்முறை சிறப்பம்சமாகும்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், இலங்கையின் முதல் மற்றும் ஒரே பிரதான பசுமை அரசியல் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பிரதான எதிர்க்கட்சியாக, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நமது பொறுப்பை தொடர்ந்து நிறைவேற்றும் என்பதையும் பாராளுமன்றத்திற்குள்ளும் எதிர்க்கட்சித் தலைவராகவும் நிறைவேற்றுவேன் என்றும் பொறுப்புடன் கூற விரும்புகிறேன்.

மேலும், பாராளுமன்றத்திற்கு வெளியே செயல்படுத்தப்பட்டு வரும் 'தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பொறுப்பு' என்ற சிறப்புத் திட்டத்தின் மூலம், பல தசாப்தங்களாக பல்வேறு அரசாங்கங்களின் கீழ் எழுந்துள்ள குறைபாடுகள் குறித்து கவனம் செலுத்துவதோடு, எதிர்கால மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் நிலையான சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதற்கான கொள்கைகளை வகுப்பதற்கும் அது சார்ந்த அரசியல் தலைமையை வழங்குவதற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிப் பிரதிநிதிகளுக்கும்  அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதற்கான அறிவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் தற்போதே முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் எங்களால் உருவாக்கவுள்ள அரசாங்கத்தில் விஞ்ஞான அடிப்படையில் மனித - யானை மோதலுக்கு ஒரு நிலையான தீர்வை வழங்குதற்கும், வனப்பகுதிகளிலுள்ள புலிகள் மற்றும் பிற ஆபத்தான உயிரினங்கள் உள்ளிட்ட ஆபத்தான உயிரினங்களை விஷேடமாக பாதுகாக்கவும்,  அப்பிரதேசங்களிலுள்ள மக்களைப் பாதுகாக்கவும், முழுமையான ஆய்வின் அடிப்படையில்  சமூக  அடிப்படையிலான திட்டங்களை  பாதுகாக்க செய்ய வேண்டிய பணிகளை ஏற்கனவே தொடங்கியுள்ளோம். மேலும் திமிங்கலங்கள் மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட கடல் விலங்கினங்களை உள்ளடக்கிய நிலையான பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த ஏற்பாட்டுத் திட்டங்களை இன்றளவிலும் உருவாக்கியுள்ளோம்.

எங்கள் எதிர்கால அரசாங்கத்தின் கீழ், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்கவும் வளப்படுத்தவும் தற்போது நிறுவப்பட்டுள்ள வனவிஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனங்களுடன் தொடர்பான மற்றும் உள்ளிட்ட பிற துறைகளுக்கு பொறுப்பான திணைக்களங்களுக்கு இதைவிடவும் பெருமையுடன் திறமையான சேவையை வழங்க, மனிதவள மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பத்தையும் பிற வசதிகளையும் பயன்படுத்த உத்தேசித்துள்ளோம். 

பல  உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் மற்றும் நிறுவனங்கள் புறநிலை மற்றும் துறைசார் அறிவு கொண்ட நிறுவனங்கள் ஏற்கனவே எங்களுடன் இணைந்து இந்த நோக்கத்திற்காக கொள்கைகளையும் திட்டங்களையும் வகுக்க தற்போதே முன்வந்துள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், இந்த திட்டங்களை எங்கள் அரசாங்கத்தின் கீழ் மிகவும் திறமையாகவும் செயலூக்கமாகவும் செயல்படுத்த எங்களுக்கு உதவுவதற்கும் அவர்கள் தமது விருப்பத்தை வெளியிடப்பட்டுள்ளனர் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

சுற்றுச் சூழல் தொடர்பான பாதுகாப்பு குறித்து உலகளாவிய முன்னுரிமையாக மாறியிருக்கும் யுகத்திலும், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்தச் செய்தி வெளியிடப்படும் இந்த நாளிலும், நமது நாடு அதன் வரலாற்றில் முன்னெப்போதையும் விட சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தவில்லை என்ற துரதிஷ்டத்தின் பின்னணியில் நான் வருந்துகிறேன்.

இலங்கையின் முதல் மற்றும் ஒரே பிரதான பசுமை அரசியல் கட்சியாக, ஐக்கிய மக்கள் சக்தி சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக மிகுந்த அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும், மேலும் ஒவ்வொரு துறையிலும் ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதில் முன்னிலை வகிப்போம் என்றும் மிகவும் பெறுப்புடன் கூறுகிறேன்.


முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-07-18 06:18:07
news-image

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு...

2025-07-18 03:20:51
news-image

தேங்காய் எண்ணெய் சில்லறை விற்பனைத் தடைச்...

2025-07-18 03:09:46
news-image

ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலய பௌதீக ஆசிரியர்...

2025-07-18 03:04:07
news-image

இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட...

2025-07-18 02:52:33
news-image

323 கொள்கலன்கள் விடுவிப்பு முறையற்றது ;...

2025-07-17 17:05:55
news-image

பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின்...

2025-07-17 16:43:19
news-image

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக...

2025-07-17 22:21:36
news-image

அமெரிக்க வரிக்கொள்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்...

2025-07-17 17:17:41
news-image

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும்...

2025-07-17 21:39:52
news-image

துறைமுக நகர திட்டத்தை இரத்து செய்வதற்கு...

2025-07-17 17:36:49
news-image

செம்மணி படுகொலை : வடக்கு மற்றும்...

2025-07-17 19:57:56