முடக்கப்பட்ட பகுதிகளில் வாழும் தொழிலாளர்களின் பரிதாப நிலை

Published By: Digital Desk 2

04 Jun, 2021 | 05:29 PM
image

சிவலிங்கம்  சிவகுமாரன்

கொரோனா தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்ட சில பெருந்தோட்டப்பகுதிகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வாழ்ந்து வரும் தொழிலாளர்களின் நிலைமை என்ன என்பது குறித்து சில ஊடகங்களில் செய்திகள், காணொளிகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

குறித்த தோட்டங்களில் வசிப்போர்  உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும்  இவர்களை எவரும் கண்டு கொள்வதில்லை என்றும் சிலர் தவறான தகவல்களை சமூக ஊடகங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து ஆராய நுவரெலியா மாவட்டத்தில் முடக்கப்பட்டிருக்கும் தோட்டப்பிரிவுகளான அட்டன்   வெள்ளை ஓயா மற்றும் தலவாக்கலை பகுதியின் சந்திரிகாமம் ஆகிய தோட்டப் பிரிவுகளுக்கு நேரடியாகச் சென்று தகவல்களை பெற்றுக் கொள்ளும் முயற்சிகளில் இறங்கினோம். முதலாவதாக வட்டவளை பொலிஸ் நிர்வாக பிரிவுக்கும் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு முட்பட்ட வெள்ளை ஓயா தோட்டப்பிரிவுக்கு 03/06/2021 வியாழக்கிழமையன்று சென்றோம்.

முடக்கப்பட்ட பகுதி என்பதால் பொலிஸாரின் விசேட அனுமதியுடனும் வாகனத்திலிருந்து இறங்கக்கூடாது என்ற சுகாதாரப் பிரிவினரின் எச்சரிக்கையுடனும் தோட்டத்துக்குள் நுழைந்தோம்.

தோட்டம் அமைதியாக இருந்தது. தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லை. அதே வேளை கொழுந்து பறிக்கும் செயற்பாடுகள் சுறுசுறுப்பாக இடம்பெற்றுக் கொண்டிருந்தன. குறித்த தோட்டம் வழமை போன்று இயங்கியது.

கொழுந்து பறிக்கும் பெண்கள் முகக்கவசங்களோடு மழையையும் பொருட்படுத்தாது கொழுந்து பறித்துக்கொண்டிருந்தனர். இத்தோட்டம் கடந்த மே மாதம் 25 ஆம் திகதியிலிருந்து முடக்கப்பட்டுள்ளது. ஆதலால் தோட்டத்தின் எல்லையில் அட்டன் கொழும்பு பிரதான வீதிக்கு வரும் சோதனை சாவடி வரை அவசர தேவைகளுக்கு மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 

அதேவேளை தொழிலாளர்கள் தமக்குத் தேவையான சகல அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் பெற்றுக்கொள்ள தோட்டத்தில் கூட்டுறவு சங்கம் சிறப்பாக இயங்கி வருகின்றமை முக்கிய விடயம். நாம் அவ்விடத்துக்கும் சென்று நிலைமைகளை அவதானித்த போது, சுகாதார விதிகளுக்கமைய தொழிலாளர்கள் இடைவெளி விட்டு பொருட்களை கொள்வனவு செய்து கொண்டிருந்தனர். மற்றொரு பக்கம் காய்கறிகள் தனியாக விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.

இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு பிரதேச செயலகத்தால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை விரைவாக கிடைக்கச் செய்யும் செயற்பாடுகள் மந்த கதியில் இடம்பெறுவதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர். 

குறித்த தோட்டப் பிரிவின் கிராம சேவை அதிகாரி மூலமும் பிரதேச மாவட்ட வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார உத்தியோகத்தர்களின் சிபாரிசுகளை உடனுக்குடன் பெற்று இந்த உதவிகளை விரைவாகப் பெற்றுக்கொள்ள அரசியல் தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

அதே வேளை  டயகம சந்திரிகாமம் தோட்டமானது கடந்த 11 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தோட்டத்தில் கொழுந்து பறித்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வந்தாலும் இங்குள்ள கூட்டுறவு கடைகளில் அத்தியாவசியமான சில பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

எனினும் தோட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தமக்குரிய பொருட்களை கடனுக்கு கொள்வனவு செய்வதற்கு அனுமதித்துள்ள தோட்ட நிர்வாகம், அத்தொகையை தொழிலாளர்களின் சம்பளத்தில் கழித்துக் கொள்வதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளது.

இதேவேளை அரச சார்பற்ற நிறுவனங்கள் ,அமைப்புகள் மூலமாகவும் சில தோட்டப் பிரதேசங்களில் தொழிலாளர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக  எமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வியாழக்கிழமை 3 மணிக்கு தேயிலை ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள தலவாக்கலை சென்.கூம்ஸ் தோட்டத்துக்கு சென்றோம்.

 பெரண்டினா நிறுவனத்தின் உதவியுடன் அத்தோட்டத்தில் உள்ள 260 குடும்பங்களுக்கு 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

இருப்பினும் குறித்த தோட்டப்பகுதிகளுக்கு இம்மாவட்டத்தின் அரசியல் பிரதிநிதிகள் மூலமாக எந்தவித உதவிகளும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்ற முறைப்பாடுகளை தொழிலாளர்கள் எமக்கு முன் வைக்க தயங்கவில்லை.  

கடந்த வருடம் இக்காலப்பகுதி தேர்தல் காலமாக இருந்ததால் பலரும் முண்டியடித்து வந்த தமக்கு உலர் உணவுப் பொருட்களை விநியோகித்தனர் என்றும் தற்போது எந்த பிரதிநிதிகளோ அல்லது அவர்களின் உதவியார்களோ எவருமே முடக்கப்பட்ட பகுதிகளுக்கு வருகை தரவில்லையென்றும் அவர்கள் கூறுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்ணுக்கு புலனாகாதவற்றை வெளிப்படுத்துதல் – காஸாவின்...

2024-03-02 12:23:33
news-image

துறக்காத துறவிகள் பயிர்களை மேயும் பேராபத்து

2024-03-01 20:47:19
news-image

சிங்களவர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் உள்ள...

2024-03-01 17:27:58
news-image

மன்னார் காற்றாலை திட்டத்தால் சுற்றுச்சூழல், பொருளாதார...

2024-03-01 16:20:49
news-image

எதிர்மறையான சமாதானத்தில் இருந்து நேர்மறையான சமாதானத்துக்கு...

2024-03-01 15:04:45
news-image

விடியும் வேளையில் வரப்போகும் திருப்பங்கள்

2024-02-28 18:49:12
news-image

வடக்கு, கிழக்கில் சுதந்திரமான ஆலய வழிபாட்டுக்கும் ...

2024-02-28 18:04:16
news-image

பத்தாயிரம் வீட்டுத்திட்டமும் பத்து பேர்ச் காணி...

2024-02-28 13:52:19
news-image

பூமியின் நுரையீரலில் மிக பெரிய அனகொண்டா

2024-02-28 11:03:34
news-image

அடையக்கூடிய எல்லைக்கு நல்லிணக்கத்தைக் கொண்டுவருதல்

2024-02-27 14:27:33
news-image

இலங்கையில் பெண் கைதிகள் சடுதியாக அதிகரிப்பு…!

2024-02-27 13:50:28
news-image

இனி என்னை அப்பா என்று யார்...

2024-02-27 12:10:48