எம்.எம்.சில்வெஸ்டர்
பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் 125 ஆவது பிரெஞ்ச் பகிரங்க போட்டியின் இரண்டாவது சுற்றுப் போட்டியில் ஸ்பெய்னின் ரபாயல் நடால், சேர்பியாவின் நொவாக் ஜோகோவிக், ரொஜர் பெடரர், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ் ஆகியோர் வெற்றியையீட்டி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
நேற்யை தினம் இரவுடன் நிறைவடைந்த இரண்டாவது சுற்றின் போட்டியொன்றில் களிமண் தரை காளை என வர்ணிக்கப்படும் நடால், பிரான்ஸின் ரிச்சர்ட் கேஸ்குவெட்டை 6 க்கு 0 , 7 க்கு 5, 6 க்கு 2 என்ற நேரடி மூன்று செட்களில் இலகுவாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
உருகுவேவின் பப்லோ சியூவஸ்ஸை எதிர்கொண்ட முதல் நிலை வீரரான சேர்பியாவின் நொவாக் ஜோகோவிக் 6க்கு 3, 6க்கு 2 , 6க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றியீட்டிருந்தார்.
இதேவேளை மற்றுமொரு போட்டியில் குரேஷியாவின் மரின் சிலிக்கை எதிர்கொண்ட சிரேஷ்ட நட்சத்திர வீரரான சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் முதல் செட்டை 6க்கு 2 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தார்.
இருப்பினும் இரண்டாவது செட்டை 2க்கு 6 என்ற கணக்கில் இழந்த பெடரர் முன்றாவது செட்டை 7க்கு6 (7/4) என போராடி கைப்பற்றினார். இதையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற நான்காவது செட்டை 6க்கு 2 என்ற கணக்கில் வென்ற பெடரர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஜேர்மனியின் இளம் வீரரான அலெக்ஸாண்டர் ஸ்வேரெவ் , ரஷ்யாவின் ரோமன் சப்பியுலினுடான இரண்டாவது சுற்றுப் போட்டியில் கடுமையாகப் போராடி 7க்கு 6 (7/4), 6க்கு 3 ,7க்கு 6(7/1) என வெற்றி பெற்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM