வெள்ளை வானில் வந்த இர­ணு­வத்­தி­னரால் கடத்திச் செல்­லப்­பட்ட எனது மகனை தேடி யாழ். ஈ.பி.டி.பி.யின் அலு­வ­ல­கத்­திற்குச் சென்­ற­போது அம்மா அம்மா என்று எனது மகன் உரக்கக் கத்­திக்­கொண்­டி­ருந்தான். எனினும் அங்­கி­ருந்த இரா­ணு­வத்­தினர் என்னை மிரட்டி அனுப்பி வைத்­து­விட்­டனர் என தாயெ­ாருவர் சாட்­சி­ய­ம­ளித்தார்.

காணாமல் போனோர் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் ஐந்தாம் நாள் அமர்வு நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சங்­கானைப் பிர­தேச செய­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதன்­போதே அராலி செட்­டியார் மடத்தைச் சேர்ந்த இரா­சேந்­திரம் துளசி என்ற தாயார் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தனது சாட்­சி­யத்தில் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

2007 ஆம் ஆண்டு காலப் பகு­தி­களில் யாழ்.மாவட்­டத்தின் நிலை மிக­மோ­ச­மாக இருந்­தது. உயிர் அச்­சு­றுத்தல் கார­ண­மாக பலரும் நாட்டை விட்டு வெளி­யே­றிக்­கொண்­டி­ருந்­தனர். இந்­நி­லையில் எனது மகன் இரா­சேந்­திரம் நேசராஜ் வெ ளிநாடு செல்­வ­தற்கு முயற்­சித்­துக்­கொண்­டி­ருந்தார். அதற்­காக கடவுச் சீட்டை எடுக்கும் நேக்­குடன் 2007 ஆம் ஆண்டு மேமாதம் 12ஆம் திகதி அன்று தகப்­ப­னா­ருடன் பிர­தேச செய­ல­கத்­திற்குச் சென்று வீடு திரும்பி வந்­து­கொண்­டி­ருந்­த­போது வட்­டுக்­கோட்டை கண்­ணகை அம்மன் ஆலயம் முன்­பாக வெள்ளை வாகனம் (வாகன இலக்கம் 252- – 3286) மோட்டார் சைக்கில்­களில் வந்­த­வர்கள் இடை­ம­றித்­தனர்.

இதன்­போது திடீ­ரென எனது மகனைத் தாக்­கி­ய­வர்கள் அவரை வாக­னத்­துக்குள் இழுத்துச் செல்ல முயன்­றனர். அதனைத் தடுக்க முயற்­சித்த என்­னு­டைய கண­வ­ரையும் தாக்­கினர். வாக­னத்தில் கொச்சைத் தமிழில் பேசிக்­கொண்டு வந்­த­வர்­களும் மோட்டார் சைக்கிளில் வருகை தந்­தி­ருந்த எமது பிர­தே­சத்தைச் சேர்ந்த ஈ.பி.டி.பி. யின் உறுப்­பி­னர்­களும் எனது மகனை இழுத்­துக்

கொண்டு சென்று வாக­னத்தில் ஏற்றிச் சென்­றார்கள்.

எனது கணவர் வீடு திரும்பி நடந்த விட­யத்தை கூறினார். நாம் மானிப்­பா­யி­லுள்ள ஈ.பி.டி.பி.யின் அலு­வ­ல­கத்­திற்குச் சென்றோம். அவர்­க­ளிடம் எனது மகன் எங்கே எனக்கேட்டோம். தாங்கள் அவ்­வாறு எவ­ரையும் பிடிக்­க­வில்லை என்­ற­னர்.

இதனைத் தொடர்ந்து யாழ்.நக­ரி­லுள்ள ஈ.பி.டி.பி.யின் அலு­வ­ல­கத்­திற்குச் சென்றோம். அதன் போது எனது மகன் நான் வந்­தி­ருப்­ப­தனை எவ்­வாறோ அறிந்து உரத்த சத்­தத்­துடன் அம்மா அம்மா என கத்­தினான். நானும் அந்த சத்தம் வந்த திசை நோக்கி கத்­திக்­கொண்டு சென்ற போது அங்கு நின்ற இரா­ணு­வத்­தினர் தடுத்து நிறுத்தி மிரட்டி அனுப்பி வைத்­தனர்.

பின்னர் இந்தச் சம்­ப­வத்தை ஈ.பி.டி.பி.யின் பொறுப்­பா­ள­ரான சில்­வேஸ்­திரி அலென்­ரி­னிடம் கூறினோம். நீங்கள் ஒவ்­வொரு சனிக்­கி­ழ­மையும் எங்கள் அலு­வ­ல­கத்­திற்கு வாருங்கள் உங்கள் மகன் தொடர்­பாக பார்ப்போம் என்றார். அந்த வார்த்­தையை நம்பி நாங்கள் பல மாதங்­க­ளாக ஒவ்­வொரு சனிக்­கி­ழ­மையும் அங்கு சென்று விட்டு ஏமாற்­றத்­துடன் திரும்பி வருவோம்.

இதனால் எந்தப் பயனும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை என கரு­திய நாம் கொழும்­புக்குச் சென்று கட்­சியின் செய­லாளர் நாய­க­மான டக்ளஸ் தேவா­னந்­தாவை நேரில் சந்­தித்து விட­யத்தை தெரி­வித்தோம். அதன் போது அவர் உங்கள் மகன் பொலி­ஸா­ரூ­டாக விடு­விக்­கப்­பட்­டு­விட்டார் என்று எமக்குப் பதி­ல­ளித்தார். எனினும் அவர் கூறி­யதன் பிர­காரம் எமது மகன் வீட்­டிற்கு வர­வில்லை. என்­னு­டைய மகனை நான் தேடாத இடம் இல்லை. ஐந்து வரு­டங்­க­ளுக்கு முன்­ன­தாக என்­னு­டைய மகனை கண்­டி­யி­லுள்ள வைத்­தி­ய­சா­லை­யொன்றில் நிற்­ப­தனை ஒருவர் கண்­டுள்ளார். எனினும் எனது மகன் இரா­ணு­வத்­தி­ன­ருடன் நிற்­ப­தா­கவும் அவ­ருக்குக் அருகில் செல்ல முடி­யாது போன­தா­கவும் கூறினார்.

ஆகவே, எனது மகன் எங்கோ இருக்­கின்றார் என்­பது மட்டும் தெளி­வா­கின்­றது. அவர் எங்­கி­ருந்­தாலும் என்­னிடம் ஒப்­ப­டை­யுங்கள். இதனைத் தான் நான் உங்­க­ளிடம் வேண்­டு­கின்றேன். நான் குறிப்­பிட்ட அந்த வாகன இலக்­கத்தை வைத்து முதலில் விசா­ரி­யுங்கள் அதன்போது பல உண்மைகள் வெளிவரும். 2007 ஆம் ஆண்டு காலத்தில் ஒருவரின் வாகனத்தை பிறிதொரு நபர் கொண்டு செல்ல முடியாது. எனது மகனை கடத்துவதற்கு வந்த வாகனம் யாருடையது. அதற்கு ஈ.பி.டி.பி.யினர் ஏன் வந்தனர். முதலில் அதனை விசாரணை செய்யுங்கள். எனது மகனை மீட்டுத்தாருங்கள் என மன்றாட்டமாகக் கோரினார்.