நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு காரணமாக மக்கள் மாத்திரம் இன்றி மிருகங்களும் உணவு இன்றி பாதிக்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு காரணமாக மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதோடு,மக்களின் நடமாட்டம் இன்றி மன்னார் நகரம் காணப்படுகின்றது.

இதனால் மன்னார் மாவட்டத்தில் உள்ள கட்டாக்காலி நாய்கள் மற்றும் கழுதை போன்ற மிருகங்கள் உணவு இன்றி உள்ளன. 

இந்த நிலையில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல்ல வீரசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைவாக மன்னார்  பொலிஸார்  மன்னார் மாவட்டத்தின் தற்போதைய பயணக்கட்டுப்பாடு மற்றும் கடை அடைப்பினால் கட்டாக்காலி நாய்கள் மற்றும் கழுதை  போன்றவை உணவு இன்றி தவித்து வருகின்ற நிலையில் இன்று வெள்ளிக்கிழமை  (4) காலை  பொலிஸார்  உணவு சமைத்து நகருக்குள் இருக்கும் கட்டாக்காலி நாய் மற்றும் கழுதை ஆகியவற்றிற்கு  உணவு வழங்கி முன்னுதாரணமாக செயல்பட்டனர்.