(எம்.எம்.சில்வெஸ்டர்)

நாட்டில் காணப்படுகின்ற தற்போதைய நிலைமையை தெளிவுபடுத்துவதற்காக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்திப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு அப்பால் நாடு குறித்து நேர்மையான உணர்வுகள் தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்களை ஆராய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்பதுடன், அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதனூடாக அவற்றை சரிசெய்துகொள்வதற்கு முடியும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பெளத்த மகா சங்கத்தலைவர்கள் உள்ளிட்ட நாட்டின் ஏனைய மதத் தலைவர்கள் நாடு குறித்து உணர்வுபூர்வமான  அறிவுரைகளிலிருந்து விலகிச் செல்லவதற்கு அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.