புதிய அனுபவங்களினால் உலகினைக் காட்டும் எக்ஸெல் வேல்ட்

Published By: Priyatharshan

27 Aug, 2016 | 09:34 AM
image

எக்செல் வேல்டானது, கொழும்பு மாநகரின் மத்தியில், தனது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச வினோத அனுபவத்தினை வழங்குவதற்காக, களிப்பூட்டும் பல புதிய கேளிக்கை வினோத அம்சங்களை புத்தம் புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

எக்செல் வேல்டானது இவ்வேடிக்கை வினோத நிகழ்வுகளினை கடந்த வருடம் மீளப் புதுப்பித்திருந்ததுடன் இக்கண்கவர் களியாட்டப் பூங்காவானது பலதரப்பட்ட புதிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் இலங்கையின் பிரபல்யம் வாய்ந்த முழுக் குடும்பத்திற்குமான பொழுதுபோக்கு பூங்காவாக தன்னை பரிணமித்துள்ளது.

எக்செல் வேல்ட் இனது Iconic Bowling Alley ஆனது இளையோர் முதல் முதியோர் வரை அனைவர் மத்தியிலும் எப்போதும் நட்சத்திரக் கவர்ச்சியாகவே மிளிர்கின்றது. ‘Strikes’ என அழைக்கப்படும் ஆறு வரிசை Bowling Alley ஆனது தற்போது சர்வதேச தரத்திற்கு அமைவாக மெருகூட்டப்பட்டுள்ளதுடன் அதனைச் சூழவிருந்த அமைப்பும் புதிய தோற்றத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

எக்செல் வேல்ட் இனது மற்றுமொரு தரமான வேடிக்கை விளையாட்டான ‘Adventura’ தற்போது புத்தம் புதியதும் புதுமையானதுமான பலதரப்பட்ட சவாரிகளுடன் தரமுயர்த்தப்பட்டுள்ளது. Pirate Ship, Carousel, Bees Ride, Fancy Train, Bumper Cars, Swan Ride மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுக் குடில் ஆகியனவே ‘Adventura’ கொண்டுள்ள ஏழு வகையான சவாரிகளாகும்.

எக்செல் வேல்ட் இனது விறுவிறுப்பான ‘Bouncy Castle’ ஆனது தற்போது புதிய விறுவிறுப்பு அனுபவங்களுடன் கூடியதாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய டோக்கன் விளையாட்டு மையமான ‘Game Zone’ ஆனது தற்போது பலதரப்பட்ட புதிய மற்றும் தொழிநுட்ப ரீதியாக அதிக முன்னேற்றகரமான விளையாட்டு சாதனங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

எக்செல் வேல்டின் புதுமையான அனுபவங்கள் நிறைந்த உலகில் லயித்து மகிழ்வதற்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் முழுவதும் எக்செல் வேல்ட் தனது வினோத விரும்பி வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

இலவச டோக்கன்கள் மற்றும் டிக்கட்டுகள், விஷேட விலைக் கழிவுகள் அத்துடன் குறிப்புக்கள் ஆகியன உள்ளடங்களாக பல ஆச்சர்யங்களுடன் கூடிய பரிசில்கள் இத்தனித்துவமான அனுபவங்களினூடக காத்திருக்கின்றன. கொழும்பின் மிக அதிகமாக விரும்பப்படும் களியாட்ட பூங்காவான இது அதன் ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பெறுமதியான பரிசில்கள் மற்றும் இலவச வெகுமதிகளை பெற்றுக்கொடுப்பதற்காக கவர்ச்சிகரமான பேஸ்புக் ஊக்குவிப்புகள் (Facebook promotions) பலவற்றினையும் வழங்குகின்றது.

மேலும், இப்புதிய எக்செல் வேல்ட் அனுபவமானது பல்வேறுபட்ட சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவு விடுதிகள் ஆகியவற்றினை, புதிய ‘Wraps’ உணவகங்களை உள்ளடக்கிய உள்ளடக்கிய அதன் vibrant food court இல் கொண்டுள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் முழுவதும் பல்வேறுபட்ட சுவையுடன் கூடிய உள்ளீடுகளை கொண்டு தயாரிக்கப்பட்ட பண்டங்களுக்கு சில சூப்பர் டீல்களையும் மற்றும் விலைக்கழிவுகளையும் Wraps வழங்குகின்றது.

எக்செல் வேல்ட் ஆனது அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச சௌகர்யத்தினை வழங்குவதற்காக போதுமான வாகனத் தரிப்பிட வசதியினையும் கொண்டமைந்துள்ளது. இதன் வாகனத் தரிப்பிடத்தில் ஒரே நேரத்தில் அண்ணளவாக 270 கார்களை தரித்து வைக்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.

இதன் புதிதாக மேம்படுத்தப்பட்ட மாநாட்டு மற்றும் உணவக வசதிகளானவை நிறுவன நிகழ்வுகள், ஒன்றுகூடல்கள், திருமண வரவேற்பு அழைப்புக்கள் மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆகியவற்றிக்கு மிகப்பொருத்தமான இடமாக எக்செல் வேல்ட் இனை உருவாக்கியுள்ளன. இம்மேம்படுத்தல்கள், மீள் நிர்மாணங்கள் மற்றும் புதிய தர கவர்ச்சிகள் ஆகியன செலவிடும் நேரத்தினை புதுமையான மற்றும் களியாட்ட விநோதங்கள் நிறைந்த தரமான நேரமாக மாற்றுவதற்கான அவதானத்துடனேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.

எக்செல் வேல்ட் ஆனது Brown & Company PLC இனது துணை நிறுவனமொன்றான Browns Investments இனால் உரிமை கொள்ளப்பட்ட நிறுவனமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் வங்கியின் நன்கொடையுடன் 1990 சுவசெரிய...

2023-12-09 18:57:05
news-image

Blade V50 வடிவமைப்புடன் கூடிய புத்தம்...

2023-12-07 19:27:42
news-image

மக்கள் வங்கி உலக வங்கி தினத்தை...

2023-12-06 12:08:12
news-image

இலங்கை சந்தைக்கு சூரிய சக்தியில் இயங்கும்...

2023-12-05 17:04:15
news-image

பெரும் போகத்திற்கு தயாராகும் விவசாயிகளுக்கு உதவும்...

2023-12-05 17:03:04
news-image

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு...

2023-12-05 12:50:24
news-image

ஆளுமையுடன் 6வது அகவையில் Capital FM! ...

2023-12-01 19:15:50
news-image

25ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளில் Ocean...

2023-12-01 10:43:40
news-image

சிறந்த முறையில் பரிவர்த்தனை : RDB...

2023-11-30 18:40:52
news-image

பாசிக்குடா மீளத்திறக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் விசேட...

2023-11-29 20:54:15
news-image

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதியியல்...

2023-11-29 16:46:41
news-image

MMBL Money Transfer தனது 3000...

2023-11-27 18:00:41