பிரிட்டன் தனது பயணக் கட்டுப்பாடுகளை வியாழக்கிழமை புதுப்பித்துள்ள நிலையில், இலங்கை உள்ளிட்ட ஏழு நாடுகள் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

பிரிட்டன் போக்குவரத்துத் திணைக்களம் அதன் பச்சை, அம்பர் மற்றும் சிவப்பு பட்டியல்களின் முதல் மதிப்பீட்டை ஜூன் 3 ஆம் திகதி அறிவித்தது.

இந்த அறிவிப்பின்படி ஜூன் 8 ஆம் திகதி காலை 4 மணிமுதல் பின்வரும் நாடுகள் சிவப்பு பட்டியலில் இருக்கும்:

  • பஹ்ரைன்
  • எகிப்து
  • இலங்கை
  • ஆப்கானிஸ்தான்
  • சூடான்
  • கோஸ்ட்டா ரிக்கா
  • டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு

சிவப்பு பட்டியல் நாடுகளிலிருந்து பிரிட்டன் செல்பவர்கள் அனைவரும் ஒரு நபருக்கு 1,750 பிரிட்டன் பவுண்ட் செலவில் 11 இரவுகளில் ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டும்.

இதற்கிடையில் மற்றொரு மறுசீரமைப்பில், போர்த்துக்கல் பச்சை நிறப்பட்டியலிலிருந்து இருந்து அம்பர் வரை தரமிறக்கப்பட்டுள்ளது. 

அங்கிருந்த வருகைகள் 10 நாட்களுக்கு வீட்டில் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்.