இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அதில் சிக்குண்டு மூவர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைவத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை இரத்தினபுரி எல்லே தேவாலயத்திற்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மண்ணில் சிக்குண்டு காணால்போனவர்களை மீட்பதற்கான பணிகளும் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஆறு மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையானது இன்று நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, காலி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே தேசிய கட்டிட ஆராச்சி நிலையத்தினால் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.