ரணிலின் தேசியப் பட்டியல் குறித்து அடுத்த வாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்படும் - சமன் ரத்னப்பிரிய

By T Yuwaraj

03 Jun, 2021 | 07:03 PM
image

(நா.தனுஜா)

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியபட்டியல் உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க பெயரிடப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து எதிர்வரும் வாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கட்சியின் உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

சமன் ரத்னப்பிரிய சில்வா பாராளுமன்ற உறுப்பினராக எதிர்வரும் 05ஆம் திகதி  சத்தியப்பிரமாணம் | Virakesari.lk

மேலும் எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருகைதரமாட்டார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரேயொரு தேசியபட்டியல் மூலமான பாராளுமன்ற ஆசனமே கிடைத்திருந்தது. அந்த ஆசனத்திற்கு ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் ஒருமனதாக கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரைப் பரிந்துரைத்தனர்.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் இதுபற்றிக் கருத்து வெளியிட்டிருந்த கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, 'இன்னும் ஒருமாதகாலத்திற்குள் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்குச் செல்வார்' என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்தவகையில் கடந்த மேமாதம் 31 ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் தேசிய பட்டியல் உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்கவின் பெயரைப் பரிந்துரைப்பதற்கான ஏகோபித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right