திருகோணமலை மாவட்டத்தில் கர்ப்பிணிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவது அதிகரித்துள்ளதுடன், இதுவரை 52 கர்ப்பிணிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 24 மணித்தியாலத்துக்குள் 19 ஆண்கள், 12 பெண்கள் அடங்கலாக 31 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் நால்வர் மரணமடைந்துள்ளனர் எனவும், மாவட்டத்தின் மொத்த மரண எண்ணிக்கை  குறித்த பணியகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் நேற்று (02) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.