கடல் வளப் பாதிப்பை இரு வாரங்களில் கணிப்பிடலாம் என்கிறது தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்

By T Yuwaraj

03 Jun, 2021 | 04:31 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தீ விபத்துக்குள்ளான எம். வி எக்ஸ்பிரஸ்  பேர்ள் கப்பலினால் நாட்டின் கடல் வளத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை இரண்டு வார காலத்திற்குள் மதிப்பீடு செய்ய முடியும். கப்பலை ஆழ்கடல் பகுதிக்கு கொண்டு சென்றால் ஏற்படவிருக்கும் பாதிப்புக்களை சற்று  குறைவாக்கலாம் என தேசிய நீர்வள வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரட்னராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தீ விபத்துக்குள்ளாகியுள்ள  சரக்கு கப்பலிருந்து பல இரசாயன பதார்த்தங்கள்  கடலில் கலந்துள்ளன. கப்பலின் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பல  கரையொதுங்கியுள்ளன.  இவற்றை அகற்றும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

இக்கப்பலினால் சமுத்திர வளத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை இரண்டு வார காலத்திற்குள் மதிப்பீடு செய்ய முடியும்.  தீ விபத்தினால் கப்பல் முழுமையாக சேதமடைந்துள்ளது.

கப்பலை ஆழ்கடல் பகுதிக்கு இழுத்து செல்லும் போது கப்பலின் பின்பகுதி கடலில் மூழ்க ஆரம்பித்தது.

ஆகையால் அப்பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. தற்போது நாட்டில்  நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கப்பலை ஆழ்கடல் பகுதிக்கு  இழுத்து செல்லும் நடவடிக்கை  மேலும் தாமதமடையும்.

எவ்வாறாயினும் கப்பலை ஆல்கடலுக்கு  இழுத்து சென்றால் மாத்திரமே கடற்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைவாக்க  முடியும்.

தீ விபத்துக்குள்ளாகிய பேர்ள் கப்பலில் இருந்து வெளியாகிய கழிவுகள் மற்றும் இரசாயன பதார்த்தங்கள் புத்தளம் தொடக்கம்  காலி வரையிலான கடற்கரை பிரதேசங்களில் கரையொதுங்கியுள்ளன. 

இவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. முதலில் பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளின் பெறுபேறுகளும் தற்போதைய மாதிரிகளின் பெறுபேறும் வேறுப்பட்டவையாக காணப்படுகின்றன.

கப்பலில்  உள்ள இரசாயன பதார்த்தங்கள் மற்றும் எத்தனை மெற்றிக் தொன் எண்ணெய்  களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன என்பதை குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை.

சுமார் 320  மெற்றிக் தொன் எண்ணெய் கப்பலில் உள்ளது என்று த்றபோது குறிப்பிடப்பட்டுள்ளது.  கப்பல் நங்கூரமிட்டிருந்த பகுதியில் இருந்து மணல் மற்றும் நீர் ஆகியவற்றின் மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டு அவை பரிசீலனை செய்யப்பட்டன. தற்போதைய நிலைக்கு அமைய  கடல் நீரில் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என்று குறிப்பிட முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர்களுக்கு தேவையானவற்றை...

2022-10-05 15:54:54
news-image

பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த...

2022-10-05 13:10:41