(செ.தேன்மொழி)
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கும் நபர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை குணப்படுத்துவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் போலி வைத்தியர் மற்றும் அவருக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
கெஸ்பேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹபொல பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்குச் சென்று , வைரஸ் தொற்றிலிருந்து அவர்களை குணப்படுத்துவதாக தெரிவித்து சிலர் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக ,கெஸ்பேவ பகுதியின் சுகாதார வைத்திய அதிகாரியொருவர் , கெஸ்பேவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இவ்வாறு மோசடியில் ஈடுப்பட்ட போலி வைத்தியர் ஒருவரையும் அவருக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கிய நபரையும் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் பயன்படுத்திய வேனையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து பல வகையான மருந்துபொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.
சிகிச்சை அளிப்பதற்காக சந்தேக நபர்கள் 12 ஆயிரம் ரூபாய் வரை அறவிடுவதாக தெரியவந்துள்ளது.
இவர்கள் முகப்புத்தகத்தில் , கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணப்படுத்துவதற்கு தங்களால் முடியும் என்று பதிவேற்றியுள்ளதுடன், அதனூடாக தங்களை தொடர்புக் கொள்ளும் நபர்களிடமே இவ்வாறு பண மோசடிகளை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கெஸ்பேவ பொலிஸார் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதுடன் , அவர்களை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM