கடலில் மூழ்கிய பேர்ளால் உப்பிற்கு ஏற்பட்ட கிராக்கி

Published By: Digital Desk 2

03 Jun, 2021 | 01:56 PM
image

நாட்டில் உப்பிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என வெளியாகிய செய்தியை தொடர்ந்து மன்னாரில் உள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (3) காலை கறி உப்பினை கொள்வனவு செய்ய மக்கள் முண்டியடித்துக் கொண்டனர்.

எனினும் மக்களுக்கு தேவையான உப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் உள்ள கடலில் தீப்பிடித்த கப்பலினால் கடலில் இரசாயனப்பொருட்கள் கலந்துள்ளமையினால் நாட்டில் உப்பு உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

 

இந்த நிலையில் மன்னாரில் உள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் இன்று வியாழக்கிழமை(3) காலை முதல் பொதி செய்யப்பட்ட அயடின் கலந்த உப்பு பக்கற்றுக்களை  கொள்வனவு செய்ய மக்கள் முண்டியடித்ததோடு, மக்கள் தமக்கு தேவையான உப்பு பக்கற்றுக்களையும் கொள்வனவு செய்து சென்றுள்ளனர்.

எனினும் மன்னார் மாவட்ட மக்களுக்கு தேவையான உப்பு போதிய அளவு உள்ளதாகவும் மக்கள் இவ்வாறு முண்டியடித்துக் கொண்டு உப்பினை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை இல்லை எனவும் தற்போது அதிக அளவு உப்பு கையிருப்பில் உள்ளதோடு, பெறும் போக உப்பு உற்பத்தியும் தற்போது இடம்பெற்று வருவதாக மன்னாரில் உள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உப்பிற்கு பெரும் கிராக்கியும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. அத்துடன் உப்பு தற்போது விற்பனை செய்யப்படும் விலையில் இருந்து விலை கூட்டப்பட்டு வியாபாரிகளால் விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். நாவாந்துறையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்...

2024-04-15 07:43:44
news-image

இன்றைய வானிலை

2024-04-15 06:18:46
news-image

நுவரெலியா - மீபிலிபான இளைஞர் அமைப்பின்...

2024-04-15 03:09:11
news-image

தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டில் ‘இனப்படுகொலையின்’...

2024-04-15 02:53:31
news-image

வயிற்றுவலி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்ட இளம்...

2024-04-15 00:26:54
news-image

பொது வேட்பாளர் விடையத்தை குழப்ப பலர்...

2024-04-14 23:04:21
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : கறுப்பு...

2024-04-14 20:56:22
news-image

பலாங்கொடையில் இளைஞர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை!

2024-04-14 19:44:28
news-image

வெளி மாகாணங்களிலிருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்காக...

2024-04-14 18:31:44
news-image

நாட்டில் பல இடங்களில் இடியுடன் கூடிய...

2024-04-14 17:58:50
news-image

புதுவருட தினத்தில் காணாமல்போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

2024-04-14 17:45:32
news-image

தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு...

2024-04-14 15:05:29