(எம்.மனோசித்ரா)
நாட்டில் தற்போது கர்ப்பிணிகளுக்கு கொவிட் தொற்று ஏற்படுவது அதிகரித்துள்ளது.
எனவே அதிக பாதிப்புக்களுக்கு முகங்கொடுக்க கூடிய கர்ப்பிணிகளை தெரிவு செய்து அவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
கர்ப்பிணிகளுக்கு தொற்று ஏற்பட்டால் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டும்.
கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.
எவ்வாறிருப்பினும் இரு கட்டமாகவும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டாலும் தொற்றுக்கு உள்ளானால் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்வது கடினமாகும்.
தற்போது கொவிட் தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணிகளுக்காக சகல மாவட்டங்களிலும் வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்கப்படுகிறது.
இதன்போது பிறக்கும் குழந்தைக்கும் சிகிச்சையளிக்கப்படுகிறது. அதிக சிக்கல்களைக் கொண்டுள்ள கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமையளித்து தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் சுகாதார தரப்பினரால் தனிப்பட்ட பிரத்தியேகமாக அறிவிக்கப்படும்.
எனவே அந்த அறிவித்தலுக்கு ஏற்ப வைத்தியசாலைகளுக்கு அல்லது தடுப்பூசி ஏற்றும் நிலையங்களுக்கு வருகை தருமாறு கர்பிணிகளை அறிவுறுத்துகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM