ஆஸி அணிக்கெதிரான  3 ஆவது ஒருநாள் போட்டியில் பங்கேற்கவுள்ள 16 பேர் கொண்ட இலங்கை அணியின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி முதல் போட்டியில் விளையாடிய மிலிந்த சிறிவர்தன அணிக்குழாமிலிருந்து நீக்கப்பட்டு அவரது இடத்திற்கு புதிய இளம் இடதுகை துடுப்பாட்டவீரரும், வலதுகை மிதவேக பந்துவீச்சாளருமான லஹிரு குமார அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திலகரட்ன டில்சானின் இறுதி ஒருநாள் போட்டியென்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்ட அணிக்குழாம் பின்வருமாறு

1.எஞ்சலோ மெத்தியுஸ் (தலைவர்)

2.தினேஸ் சந்திமால் (உபத் தலைவர்)

3.திலகரட்ண டில்சான்

4.குசல் ஜனித் பெரேரா

5.குசால் மெண்டிஸ்

6.தனஞ்சய டி சில்வா

7.எஞ்சலோ பெரேரா

8.அவிஸ்க பெர்னாண்டோ

9.தனுஷ்க குணதிலக

10.சுரங்க லக்மால்

11.திசர பெரேரா

12.டில்ருவான் பெரேரா

13.சீகுகே பிரசன்ன

14.லக்ஷான் சந்தகன்

15.அமில அபோன்ஷோ

16.லஹிரு குமார