கண்டி - பல்லேகல முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் பணியாளர்களில் 74 பேர் திடீரென சுகயீனமடைந்து மயக்கமடைந்துள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ;
வாந்தி மற்றும் தலைவலி காரணமாகவே குறித்த பணியாளர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள், மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 64 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு மயக்கமடைந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது.
எனினும், தடுப்பூசிக்கும் இவ்வாறு நோய்வாய்ப்பட்டதற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. உணவு ஒவ்வாமையால் இவ்வாறாக திடீரென இப் பணியாளர்கள் சுகயீனமடைந்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM