ஜி.ஆர். பீ மெமோரியல் அமைப்புடன் இணைந்து இரத்த மாற்றம் மற்றும் நோய் தடுப்பு இரத்தவியல் தினைக்களம் ஜம்மு - காஷ்மீரில் இரத்த தான முகாமை ஏற்பாடு செய்தது.

தொடர்ச்சியான கொவிட் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய இந்த இரத்த தான முகாம்கள் முன்னெடுக்கப்பட்டது. மேலும் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சைகளுக்கு தேவையான இரத்த பிரிவுகளை சேமிப்பது இந்த திட்டத்தின் முக்கிய கருதுகோலாகின்றது.

முக்கிய அதிதிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்ததுடன் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் நலன்களுக்காகவும் ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.