(எம்.எப்.எம்.பஸீர்)
புதிய சட்ட மா அதிபராக பதவியேற்றுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம், உடன் அமுலுக்கு வரும் வகையில் சட்ட மா அதிபரின் தொடர்பாளர் எனும் பதவி நிலையை இரத்து செய்துள்ளார்.
சட்ட மா அதிபரின் ஆணைப் படி, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் நிர்வாக விடயங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சேத்திய குணசேகர, விசேட சுற்று நிரூபம் ஒன்றூடாக இதனை அறிவித்துள்ளார்.
முன்னதாக ஓய்வுபெற்ற சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, தான் பதவியேற்றதும் சட்ட மா அதிபரின் தொடர்பாளர் எனும் பதவியை ஏற்படுத்தி, அப்பதவியில் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்னவை நியமித்திருந்தார்.
எவ்வாறாயினும் சட்ட மா அதிபர் பதவியிலிருந்து தப்புல டி லிவேரா கடந்த மே 24 ஆம் திகதி ஓய்வுபெற்றதும், சட்ட மா அதிபரின் தொடர்பாளர் எனும் பதவியில் செயற்படுவதிலிருந்து அரச சட்டவாதி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM