உள்நாட்டில் தடுப்பூசி உற்பத்தி குறித்து அமைச்சர் கூறுவதென்ன..?

Published By: J.G.Stephan

02 Jun, 2021 | 04:15 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட் தடுப்பூசியை உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் மூலம் ஆகஸ்ட் மாதம் ஆகும்போது 6 மில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறன் காணப்படுவதாக  இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இலங்கையில் கொவிட் கட்டுப்படுத்தும் தடுப்பூசி உற்பத்தி செய்தல் தொடர்பிலான சட்ட ஏற்பாடுகள், தேவையான சட்ட ஒப்பந்தங்கள் தயாரிக்கப்பட வேண்டிய முறைமைகள் தொடர்பில்  விசேட கலந்துரையாடல் நீதி அமைச்சில் இடம்பெற்றது.


நீதி அமைச்சர் அலிசப்ரி தலைமையில்  இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன,  சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைபு திணைக்களம் மற்றும் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனம் என்பவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

கொவிட் தடுப்பூசி உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் மூலம் ஆகஸ்ட் மாதம் ஆகும்போது 6 மில்லியன் தடுப்பூசிகளையும் செப்டம்பர் மாதமாகும்போது 7மில்லியன் வரையான தடுப்பூசிகளை  உற்பத்தி செய்யும் திறன் உள்ளது.

மேலும், எமக்கு தேவையான தடுப்பூசிகளின் இலக்கை பூர்த்திசெய்துகொள்ள முடியுமானால், செப்டம்பர் மாதம் இறுதியாகும்போது, நாட்டின் சனத்தொகையில் குறிப்பிடத்தக்களவானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றலாம்.

அதனால் எமது திட்டத்தின் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொண்டால், நாட்டில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த பாரிய உதவியாக அமையும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதன்போது தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:12:23
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08