மற்றொரு நட்சத்திர வீராங்கனை போட்டியிலிருந்து விலகல்..!

By J.G.Stephan

02 Jun, 2021 | 12:35 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)
பிரான்ஸில் நடைபெற்றுவரும் 125 ஆவது பிரெஞ்ச்  பகிரங்க டென்னிஸ் போட்டியிலிருந்து  செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவா போட்டியிலிருந்து விலகியுள்ளார். 

பெல்ஜிய வீராங்கனையான கிறீட் மின்னென்னையிடம் கடுமையான போரட்டத்தை எதிர்கொண்ட செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவா 6க்கு 7 (7/3) என்ற கணக்கில் முதல் செட்டை இழந்தார். பின்னர் இரண்டாம் , மூன்றாம் செட்களில் சிறப்பாக விளையாடி 7க்கு 6 (7/5) , 6க்கு   என்ற செட் கணக்கில் வெற்றியீட்டி அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.

எனினும், பெட்ரா குவிட்டாவுக்கு கணுக்காலில் ஏற்பட்ட  உபாதை காரணமாக  125 ஆவது பிரெஞ் பகிரங்க டென்னிஸ் போட்டியிலிருந்து விலகினார். இதன் காரணமாக இவரை இரண்டாவது சுற்றில் எதிர்கொள்ளவிருந்த ரஷ்யாவின் எலெனா வெஸ்னினா 'வோக் ஓவர்' அடிப்படையில்  மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதேவேளை, முன்னணி டென்னிஸ் நட்சத்திரமான ஜப்பானின் நவோமி ஒசாகாவும் தொடரிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right