டயலொக் சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளின் சூப்பர் 8 சுற்று  ஆரம்பமாவதற்கு சில நாட்கள் எஞ்சியிருக்கம் நிலையில், இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனம் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்திவைத்துள்ளது.

இதேவேளை, இம் மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்க ஒழுங்கு செய்யப்பட்டிருந்த டயலொக் சாம்பியன்ஸ் லீக் சூப்பர் 8 சுற்றுக்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் சுற்று இடம்பெறும் புதிய திகதி மற்றும் ஏனைய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படுமெனவும் இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனம் மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர்,

மைதானத்தை குறித்த திகதியில் பதிவு செய்து அதற்கு ஏற்ப போட்டிகளை ஒழுங்கு செய்தோம். ஆனால், மைதானத்தைப் பதிவு செய்யும் போது இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட தொடர்பாடல் தவறுகளால் மைதானம் குறித்த திகதியில் வேறொரு நிகழ்ச்சிக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இச் செய்தி மைதானத்திற்குப் பொறுப்பான நகர அபிவிருத்தி திணைக்களம் மூலம் எமக்குத் தெரியவந்தது.

இதேவேளை, செப்டெம்பர் மாதம்  3ஆம் திகதி சூப்பர் 8 போட்டிகள் ஆரம்பமாகும். இதேவேளை, இலங்கை விளையாட்டு விழாவும் அன்று நடைபெறவுள்ளதாலும் இலங்கை கால்பந்தாட்ட அணி கம்போடியா நோக்கி பயணிக்கவுள்ளதாலும் எமக்கு போட்டிகளை அதற்கு முன் முடிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

எமக்கு இரண்டு வழிகள் உண்டு முதலாவது போட்டிகளுக்கிடையிலான இடைவேளையை குறைப்பது.  இது சாத்தியமற்றது ஏனெனில் நாம் வீரர்களையும் கவனத்தில்கொள்ள வேண்டும். இரண்டாவது வழி, 4 வாரங்கள் சூப்பர் 8 சுற்று விளையாடப்பட்டு, கம்போடியா செல்வதற்கு 2 வாரங்கள் ஓய்வு வழங்கப்பட்டு மீண்டும் இரண்டு வாரங்களின் பின் சூப்பர் 8 சுற்றை ஆரம்பிப்பது.

இது கழகங்களுக்கிடையில் மேலும் இடையூறை ஏற்படுத்தியுள்ளது. இவ் அவசர மாற்றம் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.