காங்­கே­சன்­துறை சீமெந்து தொழிற்­சாலை பாகிஸ்­தா­னுக்கு சொந்­த­மா­கி­விட்­டது 

16 Dec, 2015 | 09:12 AM
image

அர­சாங்­கத்­துக்கு சொந்­த­மான காங்­கே­சன்­துறை சீமெந்து தொழிற்­சாலை இன்று பாகிஸ்­தா­னுக்கு சொந்­த­மான சீமெந்து தொழிற்­சா­லை­யாக செயற்பட்டு வரு­கி­றது.

அத்­துடன் அத்­தொ­ழிற்­சா­லையின் இரும்­புகள் 1.8 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கு விற்­பனை செய்து கொள்­ளுப்­பிட்­டியில் 25 மாடி அலு­வ­லகம் அமைக்­கப்­ப­டு­வ­தாக ஜே.வி.பி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹத்­துன்­நெத்தி நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தகவல் வெளி­யிட்டு குற்றம் சுமத்­தினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற 2016 ஆம் நிதி­யாண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தின் கைத் தொழில் மற்றும் வாணிப அலு­வல்கள் அரச தொழில்­மு­யற்­சிகள் அபி­வி­ருத்தி அமைச்­சுக்கள் மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

சுனில் ஹத்­துன்­நெத்தி எம்.பி. இங்கு மேலும் கூறு­கையில்,

அமைச்­சர்­க­ளான ரிசாட் பதி­யுதீன் மற்றும் கபீர் ஹாசீம் ஆகிய இரு­வ­ருக்கும் வழங்­கப்­பட்­டுள்ள அமைச்­சுக்­களின் கீழான நிறு­வ­னங்கள் நட்­டத்தை எதிர்­கொள்­கின்ற மற்றும் மூடி­விட வேண்­டிய நிறு­வ­னங்­க­ளுமே ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. வாழைச்­சேனை கட­தாசித் தொழிற்­சா­லை­யா­னது இன்று மர­ணித்­து­விட்ட தொழிற்­சா­லை­யாக உள்­ளது. ஆனால் அதற்­கான தலைமைக் காரி­யா­லயம் கொள்­ளுப்­பிட்­டியில் இருக்­கி­றது.

அதே­போன்று காங்­கே­சன்­துறை சீமெந்து தொழிற்­சா­லை­யா­னது பெரு­ம­ள­வி­லான தொழில் வழங்கும் தொழிற்­சா­லை­யாக இருந்து வந்த போதிலும் அது தற்­போது பாகிஸ்­தானின் தொழிற்­சா­லை­யா­கவே இயங்­கி­வ­ரு­கி­றது.

அது­மாத்­தி­ர­மின்றி அங்­குள்ள இரும்­புகள் 1.8 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கு விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளன. இவ்­வாறு காங்­கே­சன்­துறை சீமெந்து தொழிற்­சா­லையின் இரும்­புகள் விற்­கப்­பட்ட பணத்­தி­லி­ருந்து தான் அதன் தலை­மைக்­கா­ரி­யா­லயம் 25 மாடி கொள்­ளுப்­பிட்­டியில் அமைக்­கப்­ப­டு­கி­றது. சீமெந்து தொழிற்­சா­லையில் இரும்­பு­களை விற்­பனை செய்து 25 மாடி அலு­வ­லகம் அமைக்­கப்­ப­டு­கி­றது.

மரு­த­முனை சாரம் என்­பது இலங்­கை­யர்­களால் விரும்­பப்­ப­டு­கின்ற ஒரு உற்­பத்­தி­யாகும்.எனினும் அதனை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு எந்தத் திட்­டமும் இல்லை. இலங்கை முழுதும் இயங்கி வரு­கின்ற வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு படுக்கை விரிப்பு, தலை­யணை உறை போன்­ற­வற்றை உற்­பத்தி செய்­தலே ????? ஆடை உற்­பத்தி துறையை விருத்தி செய்ய முடியும்.

இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் வரி­களை செலுத்தி வரு­கின்ற தனியார் துறை பாரிய அபி­வி­ருத்­தி­க­ளையும் இலா­பத்­தி­னையும் அடைந்து வரு­கின்ற நிலையில் அர­சாங்­கத்­திடம் இருந்து நிவா­ர­ணங்­களைப் பெற்றுக் கொள்­கின்ற அரச நிறு­வ­னங்கள் நட்­டத்­தையே காட்­டு­கின்­றன.

குறிப்­பிட்டுக் கூறு­வ­தாயின் போட்­டித்­தன்­மையே இல்­லாத இலங்கை விமான சேவை மற்றும் மிஹீன் லங்கா விமான சேவை ஆகிய இரண்டு சேவைகளுமே அரசுக்கு சொந்தமானவை இங்கு இந்நிறுவனங்களுக்கு எதிர் நிறுவனங்கள் இல்லை. ஆனாலும் நட்டத்தில் இயங்குகின்றன.

மேலும் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலை விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08