நடிகை பிரணிதா, தொழிலதிபர் நிதின் ராஜூ என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

2011-ல் உதயன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரணிதா. கார்த்தி நடித்த சகுனி, சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி படங்களிலும் நடித்துள்ளார். ஹங்கமா 2, புஜ் ஆகிய இரு ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளமையும் குறுிப்பிடதக்கது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பெங்களூரில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்டார்கள்.

தற்போதைய சூழலால் திருமணத் திகதியை அறிவிக்க முடியவில்லை. பலரையும் அழைக்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கோருகிறேன் என இன்ஸ்டகிராமில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.