அரச காணியை அத்துமீறி அபகரிக்க முயன்ற 4 பேர் கைது : 5 மோட்டர் சைக்கிள் மீட்பு : பலர் தப்பியோட்டம்  

Published By: Gayathri

01 Jun, 2021 | 01:57 PM
image

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியிலுள்ள அரச காணியை அத்துமீறி ஆக்கரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட குழு ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை (01) பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பலர் தப்பி ஓடிய நிலையில்  5 மோட்டர் சைக்கிளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த பிரதேசத்திலுள்ள அரச காணியை குழு ஒன்று அத்துமீறி ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக சம்பவதினமான இன்று செவ்வாய்க்கிழமை (01) அரசாங்க அதிபருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பகுதியை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸார் சுற்றிவளைத்தனர். இதன்போது, அங்கு காணி ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட பலர் தப்பி ஓடிய நிலையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 5 மோட்டர்சைக்கிளையும் மீட்டுள்ளனர் 

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் : வீதியில்...

2024-06-19 03:27:32
news-image

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த்...

2024-06-19 02:29:31
news-image

அதிக வருமானம் ஈட்டுவோருக்கே வாடகை வரி ...

2024-06-19 02:26:15
news-image

தெரிவுக்குழு அமைப்பதில் உடன்பாடு இல்லை; எதிர்க்கட்சித்...

2024-06-19 02:18:38
news-image

கடல் நீரில் மூழ்கிய இளைஞன்; ஆபத்தான...

2024-06-19 02:13:43
news-image

வரிப் பணத்தை முறையாக அறவிட்டால் புதிய...

2024-06-18 15:21:30
news-image

ஒரு நாள் இரவு காட்டில் வாழ்ந்த...

2024-06-19 01:28:05
news-image

உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுத்துறை விமர்சிப்பது...

2024-06-18 15:08:11
news-image

களுபோவில வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் மனித பாவனைக்குதவாத...

2024-06-18 21:41:13
news-image

இலங்கை வரவுள்ள சீன இராணுவ மருத்துவக்...

2024-06-18 14:47:35
news-image

கோட்டாவின் பாவத்தை ரணில் தூய்மைப்படுத்துகிறார் -...

2024-06-18 17:27:30
news-image

பௌத்த மதத்தின் இருப்புக்கு தீங்கு விளைவிக்கும்...

2024-06-18 20:03:37