பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை மழையுடன் தொடர்பான வெவ்வேறு சம்பவங்களில் சிக்கி குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு,  மூன்று பேர் காயமடைந்தனர்.

பஞ்சாப் மாகாணத்தின் ஒகாரா நகரத்தின் தாரிக் அபாத் பகுதியில் இடியுடன் கூடிய மழையின்போது  கூரை இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்ததோடு, மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

உள்ளூர் மக்களும் மீட்புக் குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். 

உயிரிழந்தவர்களில் மூன்று பெண்கள், நான்கு குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் அடங்குவர், காயமடைந்தவர்களை இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இதேவேளை, மற்றொரு சம்பவத்தில், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒகாரா மாவட்டத்தின் ஹுஜ்ரா ஷா முகீம் பகுதியின் அருகே நடந்து சென்று  கொண்டிருந்தவர் மீது சுவர் விழுந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.

டோபா டெக் சிங் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் மற்றொரு நபர் உயிரிழந்துள்ளார். இவ்வாறாக மழையுடன் தொடர்புடைய சம்பவங்களில் பாகிஸ்தானில்  10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.