கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எப்படி? என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கமளித்திருக்கிறார்கள்.
கொரோனாத் தொற்றின் 3 ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. ஒருவருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டவுடன் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல அறிகுறிகள் உண்டாகின்றன.
மூக்கு அல்லது வாய் வழியாக எம்முடைய உடலுக்குள் செல்லும் கொரோனா வைரஸ் கிருமிகளை எம்முடைய உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதனை எதிர்த்து போராடி அழிக்கிறது.
மிதமான அல்லது தொடக்கநிலை கொரோனாத் தொற்று ஏற்பட்டவர்களுக்கு, எம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியான வெள்ளை அணுக்கள் அதனை எதிர்த்துப் போராடி, கிருமிகளை அழித்து உடலை பாதுகாக்கும்.
ஆனால் சிலருக்கு கொரோனா வைரஸ் கிருமியை எதிர்த்து அழிக்க, வெள்ளை அணுக்கள் தூண்டப்படும்போது, அதிலிருந்து சைட்டோகைன்ஸ் எனப்படும் திரவங்கள் சுரக்கும். இவை வைரசை அழிப்பதற்காக பணியாற்றுகிறது. இந்த திரவம் வைரஸ் கிருமிகளை மட்டும் அழிக்காமல் எம்முடைய நுரையீரலிலிருந்து இரத்தத்திற்கு பிராணவாயு செல்லுமிடத்தையும் தாக்கி சேதப்படுத்துகிறது.
இது கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு ஆறாவது நாளிலிருந்து தொடங்குகிறது. இந்தத் தருணத்தில் நமது உடலில் உட்புகுந்து இருக்கும் கொரோனா வைரஸ் கிருமிகள் இந்த சேதத்தை ஏற்படுத்தவில்லை.
ஆனால் அந்த வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக எம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியிலுள்ள வெள்ளை அணுக்கள் இயல்பான அளவைவிட அதிக அளவில் செயல்பட்டு, சைட்டோகைன்ஸ் என்ற திரவத்தை சுரப்பதனால், நுரையீரலில் ஓக்சிஜன் மற்றும் குருதி பரிமாற்றம் நடைபெறும் பகுதி சேதமடைகிறது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொடர்புடைய நோயாளிக்கு ஓக்சிஜன் அளவு குறையத் தொடங்குகிறது. இந்நிலையில் மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை அதிகரிக்க ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இந்த ஸ்டீராய்டு மருந்துகள் வெள்ளை அணுக்கள், அதிகமாக சுரக்கும் சைட்டோகைன்ஸ் என்ற திரவத்தை கட்டுப்படுத்துகிறது.
இதன் காரணமாக கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டவுடன் பரிசோதனை செய்து, அதற்குரிய சிகிச்சையை மேற்கொண்டால் இத்தகைய நுரையீரல் பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம். அத்துடன் இத்தகைய பாதிப்பு வராமல் தற்காத்துக் கொள்ள அரசு அறிவித்திருக்கும் மருத்துவ நடைமுறைகளையும் நாம் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்.
டொக்டர் துரை
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM