போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்து இராணுவத்தளபதி அறிவிப்பு

Published By: Digital Desk 4

31 May, 2021 | 09:48 PM
image

(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகளை 7 ஆம் திகதியின் பின்னரும் நீடிப்பதற்கு இதுவரையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். அவ்வாறு ஏதேனும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பரவியுள்ளமை குறித்து இராணுவத்தளபதி  வெளிப்படுத்தியது என்ன ? | Virakesari.lk

7 ஆம் திகதியின் பின்னரும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் என்று வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இதுவரையில் (இன்று வரை) 7 ஆம் திகதியின் பின்னர் போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

எனினும் 7 ஆம் திகதியின் பின்னரும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்படுகின்றன. இவை போலியானவையாகும். அவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படும் பட்சத்தில் அதனை உத்தியோகபூர்வமாக நாம் அறிவிப்போம்.

மதிப்பீடுகளின் பின்னரே இது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும். இவ்விடயத்துடன் தொடர்புடைய பல தரப்பினரிடமும் நிலைப்பாடுகளின் அடிப்படையிலேயே இறுதி தீர்மானம் எடுக்கப்படும். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் , சுகாதார அமைச்சின் செயலாளர்  உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58