(எம்.எம்.சில்வெஸ்டர்)
பிரான்ஸில் நடைபெற்றுவரும் 125 ஆவது பிரெஞ்ச் பகிரங்க போட்டியில் சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் இன்றைய தினம் களமிறங்கவுள்ளார். நடப்புச் சம்பியான நடால், ஜோகோவிக் ஆகியோர் நாளைய தினம் களமிறங்கவுள்ளனர்.

அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் தனது முதற் சுற்றுப் போட்டியில்  உஸ்பெக்கிஸ்தானின் டெனிஸ் இஸ்தோன்மின்னை இன்றிரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறார்.

  • இதேவேளை, நடப்புச் சம்பியான ஸ்பெய்னின் ரபாயல் நடால், சர்வதேச தரவரிசையில் முதலிடத்திலுள்ள சேர்பியாவின் நொவாக் ஜோகோவிக் ஆகியோர் நாளைய தினம் களமிறங்குகின்றனர். இதில் நடால்,  அவுஸ்திரேலியாவின் அலெக்ஸி பொப்ரினையும், ஜோகோவிக் அமெரிக்காவின் டென்னிய்ஸ் சான்ட்கிரானையும் எதிர்கொள்ளவுள்ளனர்.