(எம்.எம்.சில்வெஸ்டர்)

125 ஆவது பிரெஞ்ச் பகிரங்க போட்டியின் முதற் சுற்றில் ஆடவர்களுக்கான ஒற்றையர் தரவரிசையில் நான்காம் இடத்திலுள்ள ஒஸ்ட்ரியாவின் டொமினிக் தீயெம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

முதற் சுற்றுப் போட்டியில் ஸ்பெய்னின் பப்லோ அன்டுஜாரை எதிர்கொண்ட டொமினிக் தியெம் 5 செட்களில் 2 க்கு 3 என்ற கணக்கில்  அதிர்ச்சித் தோல்வியடைந்தார். 

இப்போட்டியின் முதல் இரண்டு செட்களையும் 6க்கு 4 , 7 க்கு 5 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலையில் இருந்த தியெம், கடைசி மூன்று செட்களையும்  3க்கு 6 , 4க்கு 6 , 4க்கு 6 என பப்லோவிடம் பறிகொடுத்தார்.

இதேவேளை மற்றுமொரு முதற் சுற்றுப்போட்டியில் முன்னனி டென்னிஸ் வீரரான ஜேர்மனியின் அலெக்ஸாண்டார் ஸ்வேரெவ் சக நாட்டு வீரரான ஒஸ்கார் ஒட்டேவை வீழ்த்தினார். 

இதில் முதலிரு செட்களையும் பறிகொடுத்த ஸ்வேரெவ் கடைசி மூன்று செட்களையும் தன்வசப்படுத்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.