நாளை பூமியை கடக்கவுள்ள ஈபிள் கோபுரம் அளவிலான சிறுகோள்

By Vishnu

31 May, 2021 | 01:24 PM
image

நாசாவின் கருத்துப்படி எதிர்வரும் நாட்களில் பூமியை அண்மித்து சிறுகோள்கள் கடந்து செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி ஐந்து சிறுகோள்கள் பூமியை அண்மித்த வகையில் ஒரு அணுமுறையை உருவாக்கவுள்ளதுடன், அவற்றில் ஒன்று பிரான்சின் ஈபிள் கோபுரத்தையும் விட உயரமானது என்று தெரிவிக்கப்படுகிறது.

2021 KT1 என அழைக்கப்படும் இந்த பிரமாண்டமான விண்வெளி பாறை ஜூன் 1 ஆம் திகதி பூமியை அண்மித்த வண்ணம் கடந்து செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கோள் உண்மையில் 4.5 மில்லியன் மைல் தூரத்தில் பூமியைக் கடந்து செல்லும். 

நாசாவின் கூற்றுப்படி, பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 239,000 மைல்கள் (385,000 கிலோமீட்டர்) ஆகும். இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தில் கிட்டத்தட்ட 19 மடங்கு.

மேலும் சிறு கோளின் பூமியுடனான நெருங்கிய அணுகுமுறையின் போது சுமார் 40,000 மைல் வேகத்தில் பயணிக்கும். இது ஒரு துப்பாக்கி தோட்டாவை விட கிட்டத்தட்ட 20 மடங்கு அதிக வேகமாக இருக்கும்.

2021 KT1 என்ற இந்த சிறுகோளின் விட்டம் 492 அடி முதல் 1,082 அடி வரை இருப்பதாக நாசா மதிப்பிடுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right