ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் 9 பேர் படுங்காயங்களுடன் சிலாபம் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கார் ஒன்றும் வேன் ஒன்றும் சிலாபம் புத்தளம் பிரதான வீதியில் ஆராச்சிகட்டுவ பகுதியில் வைத்து நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  

இவ்விபத்தில், காரில் பயணித்த யாழ்.தெல்லிப்பளை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் பலியாகியுள்ளதுடன் 

காரில் பயணித்த மேலும் இருவரும் வேனில் பயணித்த 7 பேரும் படுங்காயங்களுக்குள்ளாகி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.