நாட்டில் தற்சமயம் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் ஜூன் 07 ஆம் திகதிக்கு பின்னர் நீட்டிக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கொவிட் - 19 பரவல் தடுப்பு தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத்  தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அடுத்த சில நாட்களின் கொரோனா நிலைமையினை கருத்திற் அது தொடர்பான இறுதி முடிவு கொவிட்-19 தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவுடன் கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்படும் என்றும் கூறினார்.