எம்மில் பலரும் கடல் உணவுப் பொருள்களை விரும்பி சாப்பிடுவோம். ஆனால் அதனை முறையாகவும், பதமாகவும் சமைக்காமல், அப்படியே சாப்பிட்டால் சாப்பிடுபவர்களின் இரைப்பை சுவர் பாதிக்கப்படுவதாக அண்மையில் ஜப்பான் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
அண்மையில் ஒரு ஜப்பானிய பெண்மணி மருத்துவ நிபுணரைச் சந்தித்து, ‘தான் சால்மன் எனப்படும் ஒரு வகை நன்னீர் மீனை சமைக்காமல் பச்சையாகச் சாப்பிட்டேன். சாப்பிட்ட இரண்டு மணித்தியாலம் கழித்து வயிறு மற்றும் இதயப்பகுதிகளில் வலி ஏற்படுகிறது. ஏன்?’ என்று கேட்டிருக்கிறார்.
அவரை பரிசோதித்த மருத்துவர், நீங்கள் சாப்பிட்ட மீனில் உள்ள ஒட்டுண்ணிப் புழுக்கள் உங்களின் இரைப்பைச் சுவரை பாதித்து, அங்கேயே ஒருவிதமான வளையை ஏற்படுத்தியதால் தான் உங்களுக்கு வலி ஏற்பட்டிருக்கிறது’ என்று மருத்துவ விளக்கம் கொடுத்து, அதற்குரிய சிகிச்சையையும் அளித்திருக்கிறார். அத்துடன் இனி கடல் உணவுப் பொருள்களை முறையாகவும், பதமாகவும் வேகவைத்த பின்னரே சாப்பிடவேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.
எனவே எம்மில் பலரும் விடுமுறை தினங்களில் காரமாகவும், வறுத்தும் மீனை சாப்பிடுவோம். இனி இவர்கள் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட்டு உங்களின் இரைப்பை பாதிக்கப்படாமல் தற்காத்துக் கொள்ளவேண்டும்.
டொக்டர் K. சுவாமிநாதன் M.D.,
தொகுப்பு அனுஷா
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM