ஆர்.ராம்

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள கொழும்பு மாவட்ட செயலகத்தின் முதலாவது தளத்தில் உள்ள பிறப்பு, இறப்பு பதிவாளர் பிரிவு உத்தியோகத்தர்களை சந்திப்பதற்காக கிரமப்படுத்தப்பட்டிருந்த ஆசனங்களில் பலர் காத்திருக்கிறார்கள்.

தனது குழந்தையின் பிறப்புச் சான்றிதழைப் பதிவுசெய்வதற்காக வருகை தந்திருந்தவர்களில் கொழும்பில் வசித்து வருபவரும் வடமாகாணத்தினை பூர்வீகமாகக் கொண்டவருமான ஜெகதீஸ்வரனும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றார்.

அவருடைய குழந்தை கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் பிறந்த போதும் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக உடனடியாக பிறப்புச் சான்றிதழைப் பெறமுடியாத நிலைமை இருந்ததால் 13 மாதங்கள் கடந்த நிலையில்  பதிவுகளை மேற்கொள்வதற்காக  காத்திருக்கின்றார்.

பிறப்புச்சான்றிதழைப் பதிவு செய்வதற்காக பூர்த்தி செய்யப்பட்ட  சகல விண்ணப்ப படிவங்களும்  அடங்கிய கோவையை தாங்கியிருந்த அவர் ஆசனத்திலிருந்து விடைபெற்று ஆமை வேகத்தில் நகர்ந்த வரிசையில் நின்று உத்தியோகத்தரை சந்தித்தார்.

  

“நீங்கள் பூரணப்படுத்தி வந்திருக்கும் படிவத்துடன் பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டத்தின் கீழாகவுள்ள 24ஆம் பிரிவுக்கு அமைவாக, ‘மூன்று மாதங்களுக்குப் பின் பிறப்பைப் பற்றிய அறிவித்தல்' என்ற வகையறைக்குள்ளே உங்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழுக்கான பதிவினை மேற்கொள்ள வேண்டும். எனவே நீங்கள் இந்தப்  படிவத்தையும் பூர்த்திசெய்ய வேண்டும்” என  புதிய விண்ணப்ப படிவம் ஒன்றை வழங்கினார் உத்தியோகத்தர்.

அந்த விண்ணப்ப படிவத்தில் பிள்ளையின் பிறப்பு மற்றும் பெற்றோர் பூர்வீகம் உள்ளிட்ட விடயங்கள் மும்மொழிகளிலும் காணப்பட்டது. எனினும், அதனுடன் காணப்பட்ட அத்தாட்சிப்படுத்தும் படிவங்கள் தனியே சிங்கள மொழியிலேயே இருந்தன. அத்துடன் குறித்த விண்ணப்ப படிவத்தினைப் சிங்கள மொழியிலேயே பூரணப்படுத்துமாறும் உத்தியோகத்தரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

  

ஜெகதீஸ்வரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) , “எனக்கு சிங்கள மொழி பேசுவதற்கு முடியுமே தவிர எழுத முடியாது. ஆகவே இதனைப் பூர்த்தி செய்வதற்கான உதவியினை இங்கு பெற்றுக்கொள்ள முடியுமா” என்று உத்தியோகத்தரிடத்தில் வினவினார்.

உத்தியோகத்தர் “என்னால் உதவி செய்ய முடியாது. உங்கள் பின்னால் நீண்ட வரிசையில் பலர் உள்ளனர். ஆகவே இங்கு அமர்ந்துள்ளவர்களில் ஒருவரைப் பயன்படுத்தி விண்ணப்பத்தினை பூரணப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று பதிலளித்தார். உண்மையில் அந்த உத்தியோகத்தரால் அந்த உதவியை செய்ய முடியாது. அப்படியென்றால் மாற்று வழிதான் என்ன? 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-05-30#page-9

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.