(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவையின் நஷ்ட ஈட்டினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற குறுகிய மனப்பாங்கின் காரணமாக மிக அரிதான பவளப்பாறைகளும், மீனினங்கள் பலவும் அழிவடைந்துள்ளன.
குறுகிய மனப்பான்மையுடையவர்களை எவ்வாறு அரசாங்கம் என்று கூறுவது என சூழலியலாளர் பேராசிரியர் அஜந்த பெரேரா விசனம் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நைற்றிக் அமிலம் கடல் நீரில் கலந்தமையால் குறித்த கடற்பரப்பிலுள்ள சிறிய மீனினங்கள் அனைத்தும் அழிந்துள்ளன. இது மாத்திரமல்ல பவளபாறைகள் கல்சியம் காபனேற்றால் ஆனவையாகும். அவற்றில் நைற்றிக் அமிலம் கலந்துள்ளதால் அவையும் அழிவடைந்துள்ளன.
பவளப்பறைகள் அரிதானவையாகும். இதில் அங்குலமொன்று வளர்ச்சியடைய ஒருவருடம் செல்லும். இதனால் தான் சூழலிலயலாளர்கள் என்ற அடிப்படையில் நாம் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றோம்.
எமது நாட்டில் உருவான இவ்வாறான பெறுமதி மிக்க சொத்துக்கள் தற்போதைய ஜனாதிபதி மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவையினால் நஷ்டஈட்டுக்காக அழிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான குறுகிய மனப்பாங்கு எவ்வாறு இந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. இதனையா அரசாங்கம் என்று கூறுவது? கடலில் கலந்தவற்றை பிளாஸ்டின் என்று மீன்கள் அறியாது. அவற்றை உணவு என எண்ணி அவை உட்கொண்டுள்ளன.
1993 ஆம் ஆண்டு கடலில் அபாயம் மிக்க இரசாயனங்களைக் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்து ஒப்பந்தமொன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. ஆனால் தற்போதுள்ள ஜனாதிபதி இவைகுறித்து அறியாமலிருப்பதே தற்போதுள்ள பிரச்சினையாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM