(எம்.மனோசித்ரா)

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் நடுப்பகுதியில் மாத்திரம் சிறியளவில் புகை வெளியேறிக் கொண்டிருப்பதாகவும் , எனினும் எண்ணெய் அல்லது இரசாயனக்கழிவுகள் கடலில் தென்படவில்லை என்றும் (இன்று மாலை வரை) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No description available.

இந்திய இலங்கை கூட்டு நடவடிக்கை தொடர்ந்தும் நடைபெறுவதுடன் கப்பலின் பாகங்கள் தெளிவாக தென்படுகின்றன.

எனினும் அதன் நடுப்பகுதியில் மாத்திரம் புகைவெளியேறுகின்றது. எனினும் எண்ணெய் மற்றும் இரசாயன கழிவு இதுவரை தென்படவில்லை என்று அந்த டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No description available.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு சிறியளவில் தீ ஏற்பட்டிருந்த போதிலும் அதனை முழுமையாக கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No description available.

எனினும் இலங்கை மற்றும் இந்திய படகுகளால் கப்பலை குளிர்மைப்படுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

No description available.