சிறந்த இராஜதந்திர உறவு இல்லாமையால் 6 இலட்சம் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளை பெற முடியாது தடுமாறும் அரசாங்கம் - ஹர்ஷன

Published By: Digital Desk 4

30 May, 2021 | 07:57 PM
image

(எம்.ஆர்.ஆர்.வசீம்)

அரசாங்கத்துக்கு சர்வதேச நாடுகளுடன் சிறந்த ராஜதந்திர உறவு இல்லை. அதனால் தான் பற்றாக்குறையாக இருக்கும் 6 இலட்சம் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

Articles Tagged Under: ஹர்ஷன ராஜகருணா | Virakesari.lk

அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி இரண்டாம் கட்டம் ஏற்றுவதற்காக பற்றாக்குறையாக இருந்துவரும் 6 இலட்சம் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு முடியாமல் இருப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் தடுப்பூசியாக நாட்டு மக்களுக்கு இந்தியாவில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி ஆரம்பமாக ஏற்றப்பட்டது.

என்றாலும் அதன் இரண்டாம் கட்ட தடுப்பூசியை ஏற்றுவதற்கான காலம் நெருங்கி இருக்கின்றது. என்றாலும் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி 6இலட்சம் பற்றாக்குறையாக இருந்துவருவதாக அரசாங்கம் ஆரம்பத்திலேயே அறிவித்திருந்தது.

அதனை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை அந்த தடுப்பூசி பெற்றுக்கொள்ளப்படவில்லை.

மேலும் வெளிநாடுகள் இந்த தடுப்பூசிகளை தங்கள் நாட்டு பிரஜைகளுக்கு தேவைக்கும் மேலதிகமாக பெற்றுக்கொண்டு கலஞ்சியப்படுத்தி வைத்திருக்கின்றன.

அதனால் அந்த நாடுகளுடன் கலந்துரையாடி, இந்த 6இலட்சம் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது பெரிய விடயமாக இருக்காது. என்றாலும் அரசாங்கத்துக்கு சர்வதேச நாடுகளுடன் சிறந்த ராஜதந்திர உறவு இல்லை. அதனால்தான் பற்றாக்குறையாக இருக்கும் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது.

அத்துடன் அரசாங்கம் வெளிநாடுகளுடன் கதைத்து இந்த தடுப்பூசடிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்காமல், தங்களது நண்பர்களுக்கு லாபம் பெற்றுக்கொடுப்பதற்காக தனியார் நிறுவனங்களில் இருந்து இதனை பெற்றுக்கொள்ளவே முயற்சிக்கின்றது.

என்றாலும் அந்த நாடுகள் கொவிட் தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதில்லை என தெரிவித்திருக்கின்றது. அதனால் ஒரு அரசாங்கத்திடமிருந்து இன்னொடு அரசாங்கத்துக்கே இந்த தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

அதனால் அரசாங்கம் இவ்வாறான கால கட்டத்திலும் தங்களது வியாபார நண்பர்களுக்கு லாபம் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் சிந்திக்காமல் வெளிநாடுகளுடன் கலந்துரையாடி, பற்றாக்குறையாக இருக்கும் 6இலட்சம் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளை பெற்றக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38