(இராஜதுரை ஹஷான்)
2022 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்காக மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் ஆலோசனைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய கோவை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பப் படிவத்தையும் ஆலோசனை கோவையினையும் கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தில் பார்வையிட முடியும்.
இதன் பிரகாரம் பிள்ளைகளை முதலாம் தரத்திற்கு பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை பெற்றோர் அல்லது பிள்ளைகளின் உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாவலர்கள் பாடசாலை அதிபருக்கு எதிர்வரும் மாதம் 30ஆம் திகதிக்குள் கையளிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அஞ்சல் ஊடாக பாடசாலை அதிபருக்கு அனுப்பி வைத்தல் அவசியாகும். விண்ணப்பங்களை நிரப்புவதற்கு முன்னர் ஆலோசனை அறிவுறுத்தல்களை முழுமையாக வாசித்தல் கட்டாயமாகும். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியாகும் போது பாடசாலைக்கு இணைத்துக் கொள்ளும் பிள்ளை 5 வயதை முழுமையாக பூர்த்தி செய்திருக்க வேண்டும் எனவும், அதனை உறுதிப்படுத்துவதற்கு பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தின் மூலப்பிரதியை சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி 6 வயதோ அல்லது அதற்கு அதிகமான வயதெல்லையை கொண்ட மாணவர்களை முதலாம் தரத்திற்கு இணைத்துக் கொள்வதானது 6 வயதிற்கு குறைவான மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டதன் பின்னரே முன்னெடுக்கப்படும்.
முதலாம் தரத்திற்கு நேர்முக பரீட்சை ஊடாக 35 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதுடன், முப்படை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 5 பிள்ளைகளையும் இணைத்துக்கொள்ள முடியும். வகுப்பறை ஒன்றிற்கு 40 மாணவர்களை மாத்திரம் உள்வாங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM