எம்.எம்.சில்வெஸ்டர்
கரீபியன் பிரீமியர் லீக் இருபதுக்குக்கு 20 கிரிக்கெட் தொடருக்கு இலங்கையைச் சேர்ந்த மூவரை தெரிவு செய்துள்ளனர்.
இவர்களில் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து அண்மையில் விலகிய திசர பெரேரா, இசுரு உதான, வனிந்து ஹசரங்க ஆகிய மூவரும் ஆவர்.
நேற்றைய தினம் நடைபெற்ற வீரர்களுக்கான ஏலத்தில் திசர பெரேராவை பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி நிர்வாகமும், இசுரு உதானவை ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகமும் , வனிந்து ஹசரங்கவை சென்.கைட்ஸ் அன்ட் நெவிஸ் பாட்ரியட்ஸ் அணி நிர்வாகமும் எடுத்திருந்தன. இவர்கள் மூவருமே சகலதுறை வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை கரீபியன் பிரீமியர் லீக் தொடரானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை சென். கைட்ஸ் அன்ட் நெவிஸ் தீவில் நடைபெறவுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற கரீபிரியன் பிரீமியர் லீக்கில் கிரொன் பொல்லார்டின் தலைமையிலான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி சம்பியனானதுடன், அந்த அணி நான்கு தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்று அதிக தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்ற அணியாகவும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM