பொரளை பகுதியில் வீட்டிலிருந்து தப்பியோடிய கொரோனா தொற்றாளர்: தகவலறிந்தோர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தவும்..!

Published By: J.G.Stephan

29 May, 2021 | 10:49 AM
image

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெகசின் வீதியை சேர்ந்த நபரொருவர் கொரோனா நோயாளராக இனங்காணப்பட்ட நிலையில்,  அவரது வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் 28 வயதுடைய சங்கீத் தனுஸ்க எனவும், இவருக்கு கடந்த 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அதன்படி, கடந்த 28ஆம் திகதி பொரளை பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளும் சுகாதார பிரிவினரும் இணைந்து குறித்த நபரை கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்புவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில் குறித்த நபர் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த நபரை தேடும் பணியில் பொலிஸாரும் சுகாதார பிரிவினரும் செயற்பட்டு வருகின்றனர். 

மேலும், குறித்த தொற்றாளர் தொடர்பில் தகவல் அறிந்தால் கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி- 0718 591 87

பொரளை பொலிஸ் நிலையம்- 0112 694 019

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41