(செ.தேன்மொழி)

கொவிட்-19 வைரஸ் பரவல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தப்பிச்சென்ற கைதி சரணடைந்ததை அடுத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் சிறைச்சாலைகள் தலைமையகத்தை தொடர்புக் கொண்டு சரணடைவதாக தெரிவித்ததன் பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளும் , பொலிஸாரும் இணைந்து அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

தப்பிச் சென்ற 3 ஆவது கொரோனா தொற்றாளரான கைதியும் பிடிபட்டார் - மேலும்  இருவருக்கு வலைவீச்சு | Virakesari.lk

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டதை அடுத்து , பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் போது , சிறைச்சாலை பேரூந்திலிருந்து தப்பிச் சென்ற கைதி சிறைச்சாலைகள் தலைமையகத்தை தொடர்புக் கொண்டு சரணடைவதாக தெரிவித்ததை அடுத்து அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாணந்துறை பகுதியில் இருந்த கைதியை சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து அழைத்து வந்ததுடன் . அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கடந்த 26 ஆம் திகதி இரவு 7 மணியளவிலேயே கைதி தப்பிச் சென்றிருந்தார்.

பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கைதியே இவ்வாறு தப்பிச் சென்றிருந்ததுடன் , அவர் கொள்ளைச் சம்பவம் தொடர்பிலே கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை , குறித்த கைதி போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.