திருகோணமலை மாவட்டத்தில் கடும் காற்று காரணமாக 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கே.சுகுணதாஸ் இன்று (28) தெரிவித்தார்.

இம்மாதம் 21.05.2021 தொடக்கம் 26.05.2021 வரையான காலப் பகுதியின் ஊடான தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன. 

இதேவேளை நாட்டில் நிலவும்  சீரற்ற காலநிலை காரணமாக, திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேசத்தில் 5 வீடுகளும்,சேருவில பிரதேசததில் 8 வீடுகளும், குச்சவெளி பிரதேசத்தில் மூன்று வீடுகளும் தம்பலகாமம் பிரதேசத்தில் இரண்டு வீடுகளும், பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் 19 குடும்பங்களைச் சேர்ந்த 73 நபர்கள பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.