(பா.ருத்ரகுமார்)

தேர்தல்கள் ஆணைக்குழு புதிய சட்ட விதிகளை அமுல்படுத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தேர்தல் காலங்களில் தேச்தல் சட்ட நடைமுறைகளை பின்பற்றாத மற்றும் தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுபவர்களை நேரடியாக கைதுசெய்வதற்கும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கும் தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

குறித்த தீர்மானம் தேர்தல் சட்ட நடைமுறைகளை வலுவானதாக மாற்றுவதற்கு சிறந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உள்ள தேர்தல் சட்டமுறைமை பொலிஸாருக்கு மட்டுமே கைதுசெய்வதற்கான அதிகாரத்தை வழங்கியிருந்தது. 

மேலும் தேர்தல் வன்முறையாளர்கள் தொடர்பில் வழக்குகளை பதிவுசெய்யும்போது சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கவும் குறித்த சட்டம் அனுமதிக்கின்றது. 

தேர்தல் சட்டங்களை முறையாக பின்பற்றவும், தேர்தல் வன்முறைகளை குறைக்கவும் இச்சட்டம் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.