புங்­கு­டு­தீவு பகு­தியில் கடந்த மே மாதம் கூட்­டு­வன்­  பு­ணர்வின் பின்னர் படு­கொலை செய்­யப்­பட்ட பாட­சாலை மாண­வி வித்­தி­யாவின் கொலை­யுடன் தொடர்­பு­டைய குற்­றச்­சாட்டில் கைதுசெய்­யப்­பட்ட சந்­தேக நபர்­களில் மூவரை விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்தும் வகையில் கொழும்பு மகசின் சிறைச்­சா­லைக்கு மாற்ற ஊர்­கா­வல்­துறை நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி எஸ்.லெனின்­குமார் உத்­த­ர­விட்­டுள்ளார்.

நேற்­றைய தினம் குறித்த வழக்கு விசா­ர­னைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்டபோதே நீதி­பதி இந்த உத்­த­ரவை பிறப்­பித்தார்.

சந்­தேக நபர்­க­ளான சந்­தி­ர­காந்தன், துசாந்தன் மற்றும் கடந்த வாரம் கைது செய்­யப்­பட்ட பத்­தா­வது சந்­தேக நப­ரான ராஜ்­குமார் ஆகி­யோ­ரையே கொழும்பு மகசின் சிறைச்­சா­லைக்கு மாற்ற நீதிவான் உத்­த­ர­விட்­டி­ருந்தார்.

குறித்த கொலைச் சந்­தேக நபர்கள் குற்றப் புல­னாய்வு பிரி­வி­னரால் விசா­ரிக்­கப்­பட்டு வரும் நிலையில் அவர்­க­ளது விசா­ர­ணையை துரி­தப்­ப­டுத்தும் முக­மா­கவே இந்­த ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக நீதிவான் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இதே­வேளை தம்மை மகசீன் சிறைச்­சா­லைக்கு மாற்ற வேண்டாம். அங்கு மாற்றும் போது எம்மை அவர்கள் அடித்து சித்­தி­ர­வதை செய்­வார்கள். அதனை எம்மால் தாங்க முடி­யாது என சந்­தேக நபர்கள் நீதி­மன்றில் தெரி­வித்­த­துடன் தாம் தற்­கொலை செய்ய நேரிடும் எனவும் கூறினர்.

மேலும் கடந்­த­வாரம் கைது செய்­யப்­பட்ட பத்­தா­வது சந்­தேக நபர், தாம் இக் குற்­றச்­சாட்­டுடன் தொடர்­பு­பட்­ட­வ­ரல்ல எனவும் தாம் அஞ்­சலி செலுத்­து­வ­தற்­கா­கவே வித்­தி­யாவின் வீட்­டிற்கு சென்­ற­தா­கவும் மன்றில் தெரி­வி­தி­ருந்தார்.

இதற்கு பதி­ல­ளித்த நீதவான், நீங்கள் குறிப்­பி­டு­வது போன்று அங்கு சித்­தி­ர­வ­தைகள் எதுவும் இடம்­பெ­றாது. விசா­ரணைகள் அனைத்தும் சட்­டத்­துக்கு அமை­வான வகை­யி­லேயே இடம்­பெறும் எனவும் ஆனால் நீங்கள் விசா­ர­ணைக்கு பூரண ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும் என்­றும் தெரி­வித்தார்.

இதே­வேளை, கடந்த வாரம் கைது செய்­யப்­பட்ட பத்­தா­வது சந்­தேக நபர் மன­நோ­யாளி எனவும் அவ­ருக்கு பிணை வழங்க வேண்டும் என்­றும் அவர் தரப்பு சட்­டத்­த­ர­ணியால் மன்றில் கோரப்­பட்ட விண்­ணப்­பத்தை நீதிவான் எஸ்.லெனின்­குமார் நிரா­க­ரித்து அவரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார்.

வித்­தியா கூட்டு பாலியல் வன்­பு­ணர்வின் பின்னர் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தமை தொடர்பில் சந்­தே­கத்தின் பெயரில் ஒன்­பது பேரை பொலிஸார் கைது செய்­தி­ருந்­தனர்.இந்­நி­லையில் கடந்த வார­ம­ளவில் சுழி­புரம் பகு­தியை சேர்ந்த பி. ராஜ்­குமார் என்­பவர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

குறித்த சந்­தே­க­நபர் சார்­பாக மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சட்­டத்­த­ரணி, குறித்த நபர் சிறு­வ­ய­தி­லி­ருந்தே மன நோயால் பாதிக்­கப்­பட்­டவர் என்றும் அவ­ரது மருத்­துவ சான்­றி­தல்கள் 1997ஆம் ஆண்டு இடப்­பெ­யர்வின் போது காணாமல் போய்­விட்­ட­தா­கவும் தெரி­வித்­தி­ருந்தார்.

அத்­துடன் வித்­தி­யாவின் கொலை நடந்த காலப் பகு­தியில் இவர் அவ­ரது வீட்­டிற்கு அண்­மை­யி­லுள்ள குள­மொன்றின் புன­ர­மைப்பு பணிக்­கா­கவே சென்­றி­ருந்­த­தா­கவும், இவர் மன நோயின் கார­ண­மாக திரு­மண வீடுகள் மரண வீடு­க­ளுக்கு தனக்கு சம்­மந்­த­மில்­லா­விட்­டாலும் போய் வரு­வ­தா­கவும் சட்­டத்­த­ரணி தெரி­வித்­தி­ருந்தார்.

மேலும் விசா­ர­ணை­களின் போது அவர் மனோ­யாளி என்­பது தெரிய வந்தால் அவ­ரிற்கு மருத்­துவ உத­விகள் வழங்­கப்­பட வேண்டும் எனவும் அவர் விடு­தலை செய்­யப்­பட வேண்டும் எனவும் மன்றில் கோரி­யி­ருந்தார்.

இதற்கு பதி­லளித்த நீதிவான்,

குறித்த சந்­தேக நபர் மன­னோய்க்கு உள்­ளா­னவர் என்­ப­தற்கு மன்று ஏற்றுக் கொள்ளும் படி­யான எந்­த­வி­த­மான வைத்­திய சான்­தழ்­களும் சமர்ப்­பிக்­கப்­ப­டாத கார­ணத்­தி­னாலும் மேலும் வித்­தி­யாவின் கொலை­யுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்கள் சில­ரது தொடர்­பி­லக்­கங்­களும் வித்­தி­யாவின் புகைப்­ப­டங்­களும் அவ­ரி­ட­மி­ருந்து மீட்­கப்­பட்­டுள்­ளன.

எனவே இது போன்ற கார­ணங்­களால்

அவர் இக் கொலையுடன் நெருங்கிய தொடர் புடையவர் என மன்று சந்தேகிக்கின்றது. எனவே அவரிற்கான பிணை மனுவை இரத்து

செய்து அவரை விளக்கமறியலில் வைக்க

உத்தரவிடுகின்றேன் என நீதிபதி தெரி வித்தார்.

அத்துடன் குற்றப்புலனாய்வு பிரிவினரது விசாரணைகளின் போது குறித்த சந்தேக நபர் மனநோயாளியாக இனங்காணப்பட்டால் அவருக்கு நீதிமன்றின் ஊடாக மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் எனத் குறிப்பிட்டார்.