சார்க் பிராந்திய நாடுகளின் நிதியமைச்சர்களது 8வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று பாகிஸ்தான் பயணமாகின்றார். 

இம்மாநாடு பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாளை நடைபெறவுள்ளது. பிராந்திய நாடுகளின் நிதியமைச்சர்களது மாநாட்டுக்கு மேலதிகமாக நிதித்துறை தொடர்பான பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். 

பொருளாதார நடவடிக்கைகளின் போது பிராந்திய ஒத்துழைப்பு, முதலீட்டு வாய்ப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இம்மாநாட்டின் போது கலந்துரையாடப்பட இருக்கின்றது. மேலும் 2015 ஆம் ஆண்டில் நேபாளம், காத்மண்டு நகரில் நடைபெற்ற மாநாட்டில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் மற்றும் இலக்குகள் முழுமைப்படுத்தப்பட்டுள்ள விதம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட இருக்கின்றது.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர். எச். எஸ். சமரதுங்கவும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.