இந்தியாவில் நாய் குட்டியை வாயு பலூனில் கட்டி பறக்கவிட்ட யூடியூப் பிரபலம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் டெல்லியைச் சேர்ந்த கௌரவ் என்பவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.
இந்த யூடியூப் சேனலில் இந்தியாவில் 40 இலட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையாளர்களாக உள்ளனர்.
இவர் வெளியிடும் வீடியோ ஒவ்வொன்றும் பல இலட்சம் பார்வையாளர்களை அள்ளிக் குவிக்கிறது.
தனது வீடியோ வைரலாக வேண்டும் என்பதற்காக சமீபத்தில் இவர் ஹைட்ரஜன் பலூன்களில் தனது நாய்க்குட்டியை கட்டி, பறக்க விட்டபடி எடுத்த வீடியோ ஒன்றை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோவை பார்த்தவர்கள் நாயை கொடுமை செய்வதாக கருத்து தெரிவித்து வந்துள்ளனர். பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு வந்ததை தொடர்ந்து அந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது.
உரிய பாதுகாப்பு வசதிகளுடன்தான் நாயை பறக்க விட்டதாகவும், நாயை கொடுமை செய்யவில்லை என்றும் விளக்கம் தெரிவித்த அவர், இதனால் யார் மனமாவது புண்பட்டிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரவித்துள்ளார்.
ஆனால் இவருக்கு எதிராக பல்வேறு விலங்குகள் நல அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து டெல்லி மால்வியா நகர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்கள்.
இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM