(எம்.மனோசித்ரா)
சீனாவிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ள 5 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளில் 1,25,000 தடுப்பூசிகளை காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்டத்திலுள்ள சுகாதார மருத்துவ பிரிவுகளுக்கு முதற்கட்டமாக வழங்க தீர்மானித்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

எஞ்சியுள்ள 3, 75 000 தடுப்பூசிகளை ஏற்கனவே முதற்கட்டமாக சைனோபார்ம் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவை தவிர சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ள 30 இலட்சம் தடுப்பூசிகளையும் விரைவில் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.

நாட்டில் இதுவரையில் 14 இலட்சத்து 61 696 பேருக்கு முதற்கட்டமாகவும் , 3 இலட்சத்து 43 976 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் அஸ்ட்ரசெனிகா, சைனோபார்ம் மற்றும் ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.