பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகரின் கொலை இடம்பெற்றமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

பம்பலப்பிட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்டு பின்னர் கொலைசெய்யப்பட்ட வர்த்தகர் மொஹமட் சுலைமான், தலையில் தாக்கப்பட்டு இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வர்த்தகரின் தலையில் தாக்கப்பட்டதால் மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவையடுத்து மரணம் சம்பவித்துள்ளதாக  பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, சாப்பிட்ட இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்து மேலும் தெரியவந்துள்ளது.

கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இனந்தெரியாதவர்களினால் கடத்தப்பட்ட வர்த்தகர் முகமட் சுலைமான், நேற்று இரவு மாவனெல்ல பகுதியில் வைத்து சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.